கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் 32வது நாடு தழுவிய  உலாமாக்கள் கருத்தரங்கம் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைள் விவாதிக்கப்பட்டது.


 


 




பள்ளப்பட்டியில் உள்ள ஜாமியா சரியத் கல்லூரியில் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள உலாமாக்களின் 32வது கருத்தரங்கம்  நடைபெற்றது. சென்ற ஆண்டு கருத்தரங்கம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்கான்பூர் என்ற பகுதியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கு கூட்டத்தில் நாட்டில் உள்ள தேவ்பந்த், சாஹ்ரன்பூர், லக்னோ, பாட்னா, ஹைதராபாத், பஸ்தி என பல்வேறு பகுதியில் இருந்து இஸ்லாமிய உலமாக்கள் வந்தனர், இந்த கூட்டத்திற்கு பல மாநிலங்களில் இருந்து புகழ்பெற்ற மதரசா குருமார்கள் கலந்து கொண்டனர்.


 




கருத்தரங்கு கூட்டத்தில் முதலீட்டில் சில நவீன வழிமுறைகள் ஹராமான வருவாய் சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகள், அந்நிய சாயல் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காலிது சைபுல்லாஹ் ரஹ்மானீ தலைமை தாங்கினர். மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் பல்வேறு விவாதங்களில், பாலஸ்த்தீன அப்பாவி மக்களின் மீதுதாக்குதல் குறித்து அனுதாபங்களை தெரிவித்தார், இஸ்ரேலின் அணுகுமுறை அநீதம் என்றும் கொடூரம் என்றும் தெரிவித்தார்.


 




 


தொடர்ந்து  வாரிசு சொத்தாக ஒருவருக்கு ஹராமான வழிமுறைகள் சம்பந்தப்பட்ட செல்வம் கிடைத்தால் பின்னர் வரக்கூடியவர்கள் அந்த செல்வத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை குறித்தும் நமது கொள்கை வணங்க வழிபாடுகள் மற்றும் குடும்பவியல் சமூகவியல் போன்ற துறைகளில் இஸ்லாமிற்கு முரணான வழிமுறைகளை எடுத்து மற்றவர்களுடன் சொல்வதில் குறித்து விவாதம் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் இந்த கருத்தரங்க கூட்டத்தில் நடைபெற்றது. கருத்தரங்கு கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய உலாமாக்கள் கலந்து கொண்டனர்.