அரவக்குறிச்சி பகுதியில் தொடர் பண்டிகை காரணமாக கிலோ ரூ.20க்கு விற்ற சின்ன வெங்காயம் விலை 5 மடங்கு அதிகரித்து ரூ.100க்கு விற்பனையாகிறது. வெங்காய விலை திடீர் திடீரென்று ஏறுவதால், நடுத்தர வர்க்கத்து இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அன்றாடம் ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிக்க முடியாமல், வெங்காயம் உரிக்காமலே கண்களில் கண்ணீருடன் அவதிப்படுகின்றனர். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் சிறிய சரக்கு வாகனங்களில் வைத்து காய்கறி வியாபாரம் செய்கின்றனர்.




இவர்கள் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்து சில்லறையில் விற்கின்றனர். இந்நிலையில், கடந்த வாரங்களில் கிலோ ரூ.20-க்கு விற்ற சின்ன வெங்காயம் ஐந்து மடங்கு விலை அதிகரித்து ரூ.100க்கு விற்பனை ஆகின்றது. இதேபோல் கிலோ ரூ.20க்கு விற்பனையான தக்காளி விலை அதிகரித்து தற்போது கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது. இதே போல, சமையலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அனைத்து காய்கறிகளும் இரண்டிலிருந்து நான்கு மடங்கு அதிக விலைக்கு விற்பனை ஆகின்றது.




இது தொடர்பாக காய்கறி சில்லறை வியாபாரி ஒருவர் கூறியதாவது, ”திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்து சில்லறையில் விற்கப்படுகிறது. தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் பண்டிகை காரணமாக திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளிடமும் காய்கறி விலை அதிகரித்துள்ளது. இதனால், அங்கிருந்து வாங்கி வந்து விற்கும் நாங்கள் கட்டுபடியாகும் விலைக்குத்தான் விற்க வேண்டியுள்ளது. இதனால், மொத்த விலை நான்கு மடங்கு வரை விலை அதிகரித்துள்ளதால், சில்லறை விலையும் அதிகரித்துள்ளது.




தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்றார். இதனால், அரவக்குறிச்சியில் கிலோ ரூ.20-க்கு விற்ற வெங்காயம் ரூ.100க்கு விற்பனையாகின்றது. இதனால் சமையலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் தக்காளி விலை திடீர் திடீரென்று ஏறுவதால் நடுத்தர வர்க்கத்து இல்லத்தரசிகள் இதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிக்க முடியாமல் அவதிப்படுகின்றன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண