ஓணம் வந்தல்லே..! தாரை தப்பட்டை முழங்க கரூரில் கல்லூரி மாணவிகள் உற்சாக நடனம்
கேரளாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும்.

கரூரில் தனியார் அரசு மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை முன்னிட்டு தாரை தப்பட்டை முழங்க சினிமா பாடலுக்கு மாணவிகள் உற்சாகமாக நடனமாடி கொண்டாடினார்கள்.
கரூர் அருகே பண்டுதக்காரன் புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரசு மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையை உற்சாகமாக நடனம் ஆடினர் கொண்டாடினர். கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தான் ஓணம் பண்டிகை. இந்த ஓணம் பண்டிகையில் வண்ண வண்ண மலர்களைக் கொண்டு போடப்படும் அத்தப்பூ கோலம் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
Just In





அத்தப்பூ கோலம் ஏன் போடப்படுகிறது என்பதற்கு நீண்ட புராணக் கதை இருக்கிறது. தங்கள் வீடு தேடி வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கவே விதவிதமான பூக்களில் அத்தப்பூ கோலமிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் கேரளப் பெண்கள்.
கேரளாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரூர் அடுத்த மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன் புதூர் தனியார் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் பூக்களால் கோலமிட்டு தாரை தப்பட்டை முழங்க மாணவிகள் வட்டமிட்டு நடனம் ஆடினர். அதனை தொடர்ந்து பல்வேறு சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் அனைவரும் செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் ஓணம் பண்டிகையை சிறப்பித்தனர்.