கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம்.

  


கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம்  ஒன்றிய குழு தலைவர் சுமித்ரா தேவி தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்ல திட்ட பணிகளுக்கான வரவு செலவுகள், அலுவலக வரவு செலவுகள் குறித்து 25க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.



அப்போது பேசிய திமுக கவுன்சிலர்கள், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகள்  பூமி பூஜை இட்டு தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எதனையும் செய்து முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், ஒன்றிய கவுன்சிலர் பொதுநல நிதியிலிருந்து செய்யப்படும் பணிகள் குறித்து முறையாக தகவல் தெரிவிக்காமலும், ஒப்பந்ததார்கள் திட்டப் பணிகளை முடிக்க  காலம் தாழ்த்தி வருவதாகவும், மேலும் செய்த பணிகளுக்கான வரவு செலவுகளை முறையாக எங்களுக்கு தெரிவிக்காமலும் ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இன்ஜினியர்கள் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார்.


 




மேலும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதால் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும், கிருஷ்ணராயபுரம் யூனியன் பகுதிகளில் முடிக்க அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறினர். அப்போது பேசிய ஒன்றிய உதவி பொறியாளர் சரவணன், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட சுமார் 1200 திட்டப் பணிகள் நிலுவையில் இருந்து வருவதாகவும், மேலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் திட்டப் பணிகளை முடிக்க முடியாமல் தவிப்பதாகவும் கூறினார்.


ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 1200 திட்டப் பணிகள் முடியாமல் காலதாமதமாக இருப்பதற்கும், ஒப்பந்ததார்கள் சரியான முறையில் பணிகளை செய்யாமல் இருப்பதற்கும்  அதிகாரிகளாகிய நீங்களே காரணம் என்றும், மேலும் தற்போது வரை ஊராட்சி ஒன்றியத்துக்குப்பட்ட பகுதிகளில் ஒன்றிய தலைவரின் பகுதியில் மட்டுமே அதிக அளவு திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், மற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் பகுதிகளுக்கு பொதுநல நிதியை பயன்படுத்துவதில் பாரபட்சம் பார்ப்பதாகவும், ஒன்றிய பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், பிள்ளாபாளையம் ஊராட்சி பகுதிகளில் கடந்த 25 வருடங்களாக பொதுமக்கள் உப்பு தண்ணீரை குடித்து வருவதாகவும் அவர்களுக்கு காவிரி  நீர் தருவதற்கான ஏற்பாடுகளை செய்து தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும்,


 





 


மேலும் கீழ சிந்தலவாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அதிக அளவில் கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனைக்கு வரும் நிலையில் அங்கு குடிநீருக்காக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதி உற்று வருவதாகவும், இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் இல்லை என்றால் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறினார்.


திட்டப் பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதால் மக்களிடம் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் கூறி தங்களது ஒன்றிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கவுன்சிலர்கள் தெரிவித்ததால் அந்த சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.