டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது


தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்கள் ஐந்து முதல் பத்து ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாக பரவி வருகிறது.


அண்மையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் முத்துசாமி,  ” டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கக்கூடாது என தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணம் கூடுதலாக வாங்குவது பெரும்பகுதியான இடங்களில் தடுக்கப்பட்டுள்ளது. இரண்டொரு இடங்களில் கூடுதலாக பணம் வாங்குவது உள்ளது. அதனை வைத்து அனைத்து இடங்களிலும் வாங்குவதாக சொல்லக்கூடாது. கூடுதலாக பணம் வாங்குவதை முழுமையாக ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சனை பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. வாடகை பிரச்சனை, பாட்டில் சேதம், மின்கட்டணம் போன்ற தொழிலாளர்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து, இத்தவறுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாட்டில்கள் விளைநிலங்களில் வீசப்படுவதை தடுக்க வேறொரு திட்டம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்த கால அவகாசம் தேவை” என கூறியிருந்தார்.




இந்நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது


டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்களின் விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் இதனை மீறியது தெரியவந்தால் மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது ஒருபுறம் இருக்க, அமைச்சர் முத்துசாமி, ”டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கும் நேரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதாவது காலை கடினமான வேலைக்கு செல்லும் மக்கள் வேறு வழியின்றி மதுவை அருந்தி விட்டுச் செல்கின்றனர். காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆனால் எதுவும் உறுதியாகவில்லை” என தெரிவித்துள்ளார். 


EPS Pressmeet: “சூழ்நிலைக்காகத்தான் கூட்டணி; கொள்கை இதுதான்; ஸ்டாலினுக்கு அருகதை இல்லை” - டெல்லியில் இபிஎஸ் பேட்டி


”அபராத தொகையை கலைஞர் நூலகத்திற்கு புத்தகம் வாங்க பயன்படுத்துங்க” - வங்கி கணக்கு தொடங்க சொன்ன நீதிமன்றம்!


Minister Ponmudi: கிடுக்குப்பிடி விசாரணை; தேவைப்பட்டால்.. அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை வைத்த ட்விஸ்ட்..