மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் வறண்டு கிடக்கும் அமராவதி ஆறு. இதனால் கரூர் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.


 




கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகளையும், குடிநீர் தேவைகளையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்து வருகிறது. இவ்வாறு பூர்த்தி செய்து வரும் அமராவதி ஆறானது  பழனி மலை மற்றும் ஆனை மலை இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் இருந்து உற்பத்தியாகி சிறு ஓடையாக வந்து பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து அமராவதி ஆறு. அமராவதி ஆறானது திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளை ஒரு சேர பூர்த்தி செய்கிறது.


 




மேலும் அமராவதி ஆறானது கரூர் மாவட்டம் திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது. அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவது இல்லை என்றாலும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அமராவதி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும். 


 




 


 


இந்தநிலையில் அதிமுக ஆட்சியில் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளுக்காக ஆண்டாங்கோவில் பகுதியில் அமராவதி ஆற்றின் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் மூலம் மழை காலங்களிலும், அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போதும் வீணாக செல்லும் நீர் தடுக்கப்படுவதுடன், அணைக் கட்டில் தண்ணீர் தேங்குவதன் மூலம் கரூர் மக்களின் குடிநீர் தேவைகளுக்கும், விவசாய தேவைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.


 




 


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததாலும், தற்போது அதிக அளவில், வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.  இதனால் ஆண்டாங்கோவில் தடுப்பணை நீரின்றி வறண்டு காணப்படுகிறது.  எனவே கோடை காலத்தைசமாளிக்கும் வகையில் அமராவதி அணை யில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கரூர் மாவட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.