இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ப வேலை கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு வேலைவாய்ப்புத்துறை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் படிப்பை முடிப்பவர்கள் இதில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போது 53 லட்சத்து 74 ஆயிரம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்கள் வெளியிடப்பட்டது. அதில், வேலைவாய்ப்புக்காக ஆண்கள் 24 லட்சத்து 74,965 பேரும், பெண்கள் 28 லட்சத்து 98,847 பேரும், 3ம் பாலினத்தவர் 284 பேரும் பதிவு செய்துள்ளனர். மேலும், பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 பேரும் பதிவு செய்துள்ளனர். 

வயதுவாரியாக எத்தனை பேர்..? 

சமீபத்தில் 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69, 609 பேரும், 19 முதல் 30 வயது வரை உள்ள பல்வேறு தரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 23 லட்சத்து 63,129 பேரும், 31 வயது முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணிக்கான 16 லட்சத்து 94,518 பேரும், 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்ந்த பதிவுதாரர்கள் 2 லட்சத்து 40,537 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோர் 7 ஆயிரத்து 323 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

30.04.2024ன்படி மாற்றுத்திறனாளிப் பதிவுதாரர்களது விவரங்கள்: 

மாற்றுத்திறனாளிகளின் வகை  ஆண் பெண் மொத்தம்
கை, கால் குறைபாடுடையோர் 76,260 39,222 1,15,482
காது கேளாதோர்& வாய் பேசாதோர் 9,586 4,582 14,168
விழிப்புலனிழந்தோர் 12,567 5,766 18,333
அறிதிறன் குறைபாடு மற்றும் இதர குறைபாடு 1,375 445 1,820
  99,788 50,015 1,49,803

30.04.2024-ன்படி கல்வித் தகுதி வாரியாக பதிவுதாரர்களது விவரங்கள்: 

பட்ட படிப்புக்கு கீழ்

வகை பதிவுதாரர்களது எண்ணிக்கை
பத்தாம் வகுப்பிற்கு கீழ் 2,29,410
பத்தாம் வகுப்பு 40,28,368
பன்னிரெண்டாம் வகுப்பு 27,85,920
பட்டய படிப்பு 2,65,078
இதர பட்டய படிப்பு 92,851
இடைநிலை ஆசிரியர்கள் 1,48,652
என்.டி.சி(ஐ.டி.ஐ)  1,52,416
என்.டி.சி 64,416

பட்ட படிப்புகள்:

கலை 4,00,508
அறிவியல் 6,07,424
வணிகவியல் 3,02,333
பட்டதாரி ஆசிரியர்கள் 2,89,199
பொறியியல் 2,41,108
மருத்துவம் 1,346
வேளாண்மை 7,594
வேளாண்மை பொறியியல் 361
கால்நடை அறிவியல் 1,024
சட்டம் 1,882
இதர பட்ட படிப்புகள் 1,43,759

முதுகலை பட்ட படிப்புகள்: 

கலை 1,44,522
அறிவியல் 1,74,887
வணிகவியல் 47,664
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,12,231
பொறியியல் 2,09,788
மருத்துவம் 791
வேளாண்மை 436
வேளாண்மை பொறியியல் 8
கால்நடை அறிவியல் 97
சட்டம் 152
இதர பட்ட படிப்புகள் 1,81,301

அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போரின் எண்ணிக்கையை அவ்வப்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.