கரூரை அடுத்த புலியூரில் தனியார் கல்லூரி மைதானத்தில் தனியார் நடன பயிற்சி மையம் சார்பில் புதிய உலக நடன சாதனை நிகழ்ச்சியை நடத்தினர். தமிழ் மைக்கேல் ஜாக்சன் எனும் தலைப்பில் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் மைக்கேல் ஜாக்சனின் உடை போன்று ஆடையும், தலையில் தொப்பியும் அணிந்து அவரது நடனத்தை ஆடினர். மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு இணையான ராக் மற்றும் பாப் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை தேர்ந்தெடுத்து சுமார் 11.30 நிமிடம் நடனம் ஆடி புதிய உலக சாதனை படைத்தனர். 


 


 




Asia book of records, world record union, Indian book of record போன்ற உலக சாதனை புத்தகங்களில் இந்த சாதனை இடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிழை world record union international adjudicator கிரிஸ்டோபர் டைலர் கிராப்ட் கலந்து கொண்டு வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் வினு கலந்து கொண்டு சிறப்பித்தார்.


 





கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பாக்ஸிங் வளையத்துக்குள் ஆக்ரோசத்துடன் மோதிக்கொண்ட வீரர்கள் - முதல் மூன்று இடங்களை புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்கள் தட்டி சென்றன.


கரூர் அடுத்த தான்தோன்றிமலையில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி நேற்று தொடங்கியது. ஜூனியர், சப் ஜூனியர், யூத், சீனியர் என்ற நான்கு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 400 வீரர்கள் பங்கேற்றனர்.


 




14 வயது முதல் 35 வயது வரையில் நடைபெற்ற போட்டியில், 16 மாவட்டங்களின் குத்துச்சண்டை பயிற்சி மையங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற போட்டியில் பாக்ஸிங் வளையத்துக்குள் வீரர்கள் ஆக்ரோசத்துடன் மோதிக் கொண்டனர். 


 


 




இதில் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் முதல் மூன்று இடங்களை தட்டி சென்றனர். வெற்றி பெற்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு கோப்பை, பதக்கங்கள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. மேலும், சிறந்த குத்துச்சண்டை வீரர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. மாநில அளவிலான இந்த போட்டியானது கரூர் தனியார் பயிற்சி மையத்தின் தலைவர் பிரபாகரன், செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.