மாயனூர் கதவணையில் தண்ணீர் வரத்து குறைவு.






மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 753 கன அடியாக குறைந்தது. கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 20230 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 753 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 65 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால், அமராவதி ஆறு புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 62.54 அடியாக இருந்தது. அணைப்பகுதியில்,15 மில்லி மீட்டர் மழை பெய்தது.


நங்கஞ்சி அணை




திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால் நங்கஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்கஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 28.67 அடியாக உள்ளது ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


ஆத்துப்பாளையம் அணை




கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை ஆறு மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 13.12 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் அனைப்பாளையத்தில் 15 மில்லிமீட்டர்  கா. பரமத்தி 13 மில்லி மீட்டர் மழை பெய்தது.


ரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை. ஒரு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு.


கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  பகலில் வெயில் 104, 105 டிகிரி பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லவோ,  இருசக்கர வாகனங்களில் செல்லவோ முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.   


இந்நிலையில் இன்று இரவு கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், மாயனூர், லாலாபேட்டை, குளித்தலை, திம்மாச்சிபுரம், புணவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, மகாதானபுரம், அய்யர்மலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மழைநீர் சாலைகளில் வெள்ளநீராக ஓடியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.


இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இருந்தாலும் மழை மற்றும் மழை விட்ட பிறகும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.