மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்துசரிவு.


மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு 9,135 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காலை 8 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 9,090 கன அடியாக குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் டெல்டா பாசன பகுதியில், குருவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. 


 


 




நங்காஞ்சி அணை நிலவரம்.


திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால்,  நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர்   வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 28.65 அடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


ஆத்துப்பாளையம் அணை.


கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி, அனைக்கு தண்ணீர் வரத்து இல்லை, 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 11.31 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


 




 


அமராவதி அணையில் தண்ணீர் குறைப்பு


அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு திடீரென குறைக்கப்பட்டதால் கரூர் மாவட்டத்தில் கடைமடைவரை தண்ணீர் செல்லுமா என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமராவதி ஆறு உற்பத்தி ஆகிறது. அங்கிருந்து செல்லும் தண்ணீர் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையில் தேங்கிவைக்கப்படுகிறது.


மேலும், குதிரை ஆறு, சண்முகா நதி, ஆறு குடகனாறு ஆகிய உப நதிகள் அமராவதி ஆற்றில் இணைகிறது. கரூர் மாவட்டத்தில், அமராவதி அருகில் உள்ள 18 வாய்க்கால்கள் மூலம் 25,000 பாசன வசதி பெறுகிறது. மேலும், சின்னதாராபுரம், நஞ்சை காலக்குறிச்சி, அணைப்பாளையம், பகுதியில் 3 பழைய அணைக்கட்டுகள் செட்டிபாளையத்தில் உள்ள தடிப்பனைகளில் பிரியும் நான்கு பழைய பாசன வாய்க்கால் மூலம் 13,175 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 


 


 


 


 




 


இந்நிலையில் கடந்த மாதம் கேரளாவில் உள்ள நீர் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக அமராவதி அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்தது. சமீபத்தில் அமராவதி அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 850 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், காலை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 190 ஆக குறைக்கப்பட்டது. இதனால் தண்ணீர் கடைமடை பகுதியான செல்லுமா என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். காலை ஆறு மணி நிலவரப்படி அணை வினாடிக்கு 176 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் 190கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 63.91 அடியாக உள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.