இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ இருப்பில்‌ உள்ள கட்டுப்பாட்டு கருவி மற்றும்‌ வாக்கினை சரிபார்க்கும்‌ இயந்திரங்களை அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும்‌ திருவாரூர்‌ மாவட்டங்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ சி.பழனி ஆய்வு மேற்கொண்டார்‌.


இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்திரவின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திட சேமிப்பு கிடங்குகள்‌ அமைக்கப்பட்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்‌ அடிப்படையில்‌ விழுப்புரம்‌ மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில்‌ புதியதாக கட்டப்பட்டுள்ள மின்னணு சேமிப்பு கிடங்கின்‌ உறுதி தன்மை குறித்தும்‌, சேமிப்பு கிடங்கின்‌ உட்பகுதியில்‌ ஈரத்தன்மை உள்ளதா என்பது குறித்தும்‌, தண்ணீர்‌ தேங்கியுள்ளதா என்பது குறித்தும்‌, எலிகள்‌ நடமாட்டம்‌ உள்ளதா என்பது குறித்தும்‌ 26.06.2023 அன்று மாவட்ட ஆட்சியர்‌ அவர்களால்‌ அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகளின்‌ முன்பாக உள்ளார்ந்த காலாண்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.


மேலும்‌, இந்திய தேர்தல்‌ ஆணையம்‌ விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ இருப்பில்‌ உள்ள மின்னணு இயந்திரங்களில்‌ இருந்து 580 எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு இயந்திரங்கள்‌ 180 எண்ணிக்கையிலான வாக்காளர்‌ வாக்குப்பதிவை உறுதி செய்யும்‌ இயந்திரங்களை அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும்‌ திருவாரூர்‌ மாவட்டங்களுக்கு வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்து மாறுதல்‌ செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு ஒயந்தியரங்களை சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக 28.06.2023 அன்று மாவட்ட ஆட்சியர்‌ அவர்களால்‌ அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகளின்‌ முன்பாக மாறுதல்‌ செய்யப்பட உள்ளது.


மேற்படி இயந்திரங்களை வழங்குவதற்கு முன்னேற்பாடாக 58 செய்து, எண்ணிடப்பட்டு தயார்‌ நிலையில்‌ வைப்பதற்கு நேற்று (26.06.2023) எண்ணிடும்‌ பணி அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகளின்‌ முன்பாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில்‌ விழுப்புரம்‌ வருவாய்‌ கோட்டாட்சியர்‌ பிரவீனா குமாரி, தனி வட்டாட்சியர்‌ (தேர்தல்‌) கோவர்தனன்‌, விழுப்புரம்‌ வருவாய்‌ வட்டாட்சியர்‌ வேல்முருகன்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகள்‌ ஆகியோர்‌ கலந்துகொண்டனர்‌.


 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர