கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த மே மாதம் எட்டியது. இதனை அடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டு வந்தது.





இந்நிலையில், மீண்டும் கனமழை வேகம் எடுத்துள்ளதால் கர்நாடகா மாநிலத்திலிருந்து அதிகளவு தண்ணீர் வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு முன்தினம் காலை முதலே வரத் தொடங்கியது. முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 795 கனஅடி வரத்தாக இருந்தது.


மேலும் படிக்க: Breaking Live : அரசாங்கம் 4-5 பேரில் நலனுக்காக நடத்தப்படுகிறது - ராகுல் காந்தி




இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடரும் கனமழையால் மேட்டூருக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து இரண்டு லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




 


மாலை நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 71 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீர் கதவணையில் இருந்து 98 மதகுகள் வழியாக அப்படியே திறக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மாயனூர் கதவணையில் கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது குளித்தலை ஆர்டிஓ புஷ்பா தேவி, தாசில்தார் முருகன், உதவி பொறியாளர் ஸ்ரீதர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


மேலும் படிக்க: சாத்தனூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 112.95 அடியை எட்டியது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண