Breaking Live : போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
என் எல் சிக்கு நிலம் வழங்கி குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சிறப்பு தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும். கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரிகளை நியமிக்கக்கூடாது - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் நடந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.50% ஆக அதிகரிப்பு - சக்தி காந்த் தாஸ்
ஜனநாயகத்தின் மரணத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சர்வாதிகாரத்துக்கு எதிராக எழுந்து நிற்பவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள் - ராகுல் காந்தி
Congress Protest : அரசாங்கம் 4-5 பேரில் நலனுக்காக நடத்தப்படுகிறது - ராகுல் காந்தி
ஆகஸ்ட் 7-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றது தொடர்பாக 47 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Background
தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளை வியாழன் அன்று நடத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை தைவானுக்கு அருகே நிறுத்தியுள்ளது.
நேற்று, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்ற நிலையில், தைவானை தனது ஓர் அங்கமாக கருதி வரும் சீனா, இந்த செயலால் போபம் அடைந்தது. தைவானோ, தனி அரசாங்கத்துடன் இயங்கி வருகிறது. அமெரிக்காவின் செயலுக்கு பதிலடி தரும் வகையில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்காவின் உயர் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதி தைவானுக்கு சென்றது இதுவே முதல்முறை. இதற்கு பதிலடியாக, உலகின் பரபரப்பான கடல்வழி பாதையிலும் தைவான் கரையிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் உள்ள பகுதிகளிலும் சீனா தொடர்ச்சியான போர் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "பயிற்சிகள் மதியம் 12 மணியளவில் (0400 GMT)தொடங்கியது. மேலும் தைவானின் கிழக்கே உள்ள நீரில் வழக்கமான ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டோம். ஏவுகணைகளின் துல்லியத்தையும் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதிக்குள் எதிரியை அனுமதிக்காமல் தவிர்க்கும் போர் திறனை சோதனை செய்வதே இந்த பயற்சியின் நோக்கம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் போர் பயிற்சி குறித்து தெரிவித்துள்ள தைவான், "11 டோங்ஃபெங்-வகுப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா பல தொகுதிகளாக தாக்கியுள்ளது. பிராந்திய அமைதியை கெடுக்கும் பகுத்தறிவற்ற நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது. சீனாவால் ஏவப்பட்ட ஏவுகணைகள் எங்கு தரையிறங்கியது அல்லது எங்கு பறந்தது என்பது குறித்து தைவான் தகவல் வெளியிடவில்லை.
எல்லைத் தீவான பிங்டானில் உள்ள பத்திரிகையாளர்கள், பல சிறிய எறிகணைகள் வானத்தில் பறப்பதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து வெள்ளை புகை மற்றும் உரத்த ஒலி அங்கிருந்து கிளம்பியதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் பிரதான நிலப்பரப்பில், தைவானுக்கு மிக நெருக்கமான புள்ளியாகக் கூறப்படும் இடத்தில், பிரபல சுற்றுலாத் தலத்திற்கு அருகே ஒப்பீட்டளவில் குறைந்த உயரத்தில் ஐந்து இராணுவ ஹெலிகாப்டர்கள் பறப்பதையும் பத்திரிகையாளர்கள் கண்டனர்.
இந்த போர் பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நீடிக்கும் என்று சீனா அறிவித்துள்ளது. சீனாவின் செயல், தைவானுக்கு எதிரான போராக மாறுமோ என உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -