மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு


மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு, காலை வினாடிக்கு, 28 ஆயிரத்து, 608 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரம் படி, வினாடிக்கு, 26 ஆயிரத்து, 671 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. காவிரி ஆற்றில், சம்பா சாகுபடி பணிக்காக, 25 ஆயிரத்து, 871 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.




அமராவதி அணை


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, 772 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 706 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 158 கன அடி தண்ணீரும், திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 89.08 அடியாக இருந்தது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு, காலை வினாடிக்கு, 3,419 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி மழை காரணமாக, 2,718 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது.


ஆத்துப்பாளையம் அணை


கரூர் மாவட்டம், கா. பரமத்தி அருகே கார்வாலி ஆத்துப் பாளையம் அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி அனைக்கு வினாடிக்கு, 35 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மேலும், 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 26.20 அடியாக இருந்தது நொய்யல் பாசன வாய்காலில் வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


நங்காஞ்சி அணை நிலவரம்




திண்டுக்கல் மாவட்டம், வடக்காடு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது.  இதனால் நங்காஞ்சி ஆற்றில் இருந்து இரண்டு பாசன கிளை வாய்க்காலில், தலா 10 கண்ணாடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அனைக்கு வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது.


பொன்னணி ஆறு அணை


 கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 28.16 அடியாக இருந்தது.


நெல் வயல்களில் களை அகற்றும் பணி மும்முரம்.


கரூர் மாவட்டத்தில், காவிரி மற்றும் அமராவதி ஆற்று பாசனப்பகுதிகளில், சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில், களை அகற்றும் பணி மும்மரமாக நடந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த, மே மாதம், 24 முதல் பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், குருவை சாகுபடி திருப்திகரமாக முடிந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம், சம்பா பருவ சாகுபடி தொடங்கியது. அதேபோல், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, குடிநீர் தேவை மற்றும் பாசனத்திற்காக ஆற்றில் கடந்த, செப்டம்பர் மாதம் முதல் முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டது. மழை காரணமாக கடந்த ஒரு மாதமாக, அமராவதி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 




தண்ணீர் வரத்து திருப்தியாக உள்ளதால், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் உள்ள, கரூர் கா. பரமத்தி, அரவக்குறிச்சி தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டாரங்களில்,  பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நெல் வயல்களில் தற்போது, கலை அகற்றும் பணிகளில், விவசாயக் கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.