செட்டிபாளையம் அணைக்கு 13,300 கன அடி நீர்வரத்து.




அமராவதி ஆற்றில் நேற்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,405 கன அடியிலிருந்து 6,792 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், ராஜாபுரம், கா. பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 13 ஆயிரத்து 300 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது .பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் வந்தது.


 மாயனூர் கதவணை


மாயனூர் கதவனைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 19,829 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 35 ஆயிரத்து 951 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்காக 35 ஆயிரத்து 751 கன அடி தண்ணீரும் ஒரு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி கண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 


 



நங்கஞ்சி அணை


திண்டுக்கல் மாவட்டம் நங்கஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 153 கன அடி தண்ணீர் வந்தது. 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 37.07 அடியாக இருந்தது அணைப்பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.


ஆத்துப்பாளையம் அணை


கா.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு  காலை 6:00 மணி நிலவரப்படி 179 காண அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 25.87 அடியாக இருந்தது. அணையிலிருந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அணைப்பகுதியில் 43 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


பொன்னணி ஆறு அணை


கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு  காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 27 புள்ளி 90 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 4.4 மில்லி மீட்டர் மழை பெய்தது.




 


கரூரில் மீண்டும் மழை


கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் மீண்டும் மழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மழை சற்று குறைந்த நிலையில் மதியம் 12 மணிக்கு கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மீண்டும் மழை விட்டு விட்டு பெய்தது. கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்: கரூர் 2.4 அரவாக்குறிச்சி. 8 அணைப்பாளையம் 5.4.கா. பரமத்தி 7.4 குளித்தலை 1.3 தோகைமலை2  கிருஷ்ணராயபுரம் மாயனூர் பஞ்சப்பட்டி 4.4 .மயிலம்பட்டி .2 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 3.24 மில்லி மீட்டர் மழை பதிவானது.