தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நூற்றுக்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில், புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களைத் தனித்தனியே அமர வைத்து வாழை இலை, விளக்கு திரி, விளக்கு எண்ணெய், மஞ்சள், பச்சை அரிசி, குங்குமம் உள்ளிட்ட பொருட்களை ஆலயத்தின் சார்பாக வழங்கி, அதன் தொடர்ச்சியாக திருவிளக்கு பூஜை சிறப்பாக தொடங்கியது.




சிவாச்சாரியார் ஆலய திருவிளக்கு முன்பாக அமர்ந்து வேத மந்திரங்கள் ஓதியபடி குங்குமத்தால் அர்ச்சனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பக்தர்களும் தங்களுடைய திருவிளக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்த பின் திருவிளக்குகளுக்கு தூப தீபங்கள் காட்டி, தொடர்ச்சியாக மகா தீபாராதனை காட்டினர்.


கரூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலயத்தின் சார்பாக விபூதி, குங்கும பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜை ஏற்பாட்டை ஆலய பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


 


 




தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு தங்க தேரோட்டம்.


தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தங்க தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தங்க தேரின் சுவாமியை கொலுவிருக்க செய்தனர். அதை தொடர்ந்து ஆலயத்தின் பூசாரி தங்க தேரில் கொழுவிருந்த மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டினர்.


 


 




பின்னர் மேள தாளங்கள் முழங்க ஆலய மண்டபத்திலிருந்து தங்க தேரோட்டம் புறப்பட்டது. மாரியம்மன் தங்க தேரோட்டம் ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயத்துக்குள் குடிபுகுந்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. புரட்டாசி மாத பௌர்ணமி முன்னிட்டு நடைபெற்ற மாரியம்மன் தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.