குளித்தலை அருகே கீழ ஆரியம்பட்டியில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Continues below advertisement


 




 


கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன், விநாயகர், பாலமுருகன், வில்வ மரத்தான் கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களுக்கு ஆகிய தெய்வங்கள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் மக்கள் மற்றும் விழா கமிட்டியினர். முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர்.  தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக விழா  வெகு விமரிசையாக நடைபெற்றது.


 




காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேண்டி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, ரக்க்ஷா பந்தனம், திரவ்யாஹூதி பூர்ணாஹூதி, மகா தீபாரதனை உள்ளிட்ட 2 கால யாகவேள்வி பூஜைகளை செய்தனர். 2ம் கால யாக வேள்வி பூஜை  நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தினை  மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.


 




வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரினை கலசத்திற்கு ஊற்றினர். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மகா மாரியம்மன், விநாயகர், பாலமுருகன், வில்வ மரத்தான் கருப்பண்ண சுவாமி மூலவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கீழ ஆரியம்பட்டி பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.