குளித்தலையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான தோட்ட வீட்டில் பதுக்கி வைத்திருந்த 151 கிலோ புகையிலைப் பொருட்களை குளித்தலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி அருகே போலீசார் வாகனம் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.




அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த குளித்தலை கடம்பர் கோவில் தெற்கு மணவாள தெருவை சேர்ந்த சாகுல் அமீது மகன்கள் ஆசாத், சாதிக் இருவரது வாகனங்களை நிறுத்தி சோதனையிட்ட போது அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் குளித்தலை பெரிய பாலம் அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோட்ட வீட்டில்  புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.




போலீசார் அங்கு சென்று சோதனையிட்டதில் அவரிடமிருந்து 105 கிலோ ஹான்ஸ் பாக்கெட்களையும், 41 கிலோ கூல் லிப், பான் மசாலா பாக்கெட்டுகளையும், இருவரின் பைக்குகளையும்  பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் குளித்தலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.


 




இதில் சாதிக் வழக்கறிஞர் படிப்பு படித்துள்ளார். புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் தோட்டத்து வீடு முன்னாள் குளித்தலை நகர மன்ற துணைத் தலைவரும் தற்போதைய திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஜாபருல்லா என்பவருக்கு சொந்தமானது. இந்த தோட்டத்தில் உள்ள வீட்டை இவர்கள் வாடகைக்கு எடுத்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.




குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் சிறை தண்டனை.


கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஆட்சி தலைமையில் தொழிலாளர் நலப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் பூர்விகா மாவட்ட குழந்தைகள் கடத்தல் பிரிவு சார்பு ஆய்வாளர் சித்ராதேவி வாங்கல் அரசு மருத்துவர் சுரேந்த தொழிலாளர் உதவி ஆய்வாளர் சரவணகுமார் குமாரக்கண்ணன் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் கள அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் குழந்தை தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் தடுத்தல் சட்டம் 1986 இன் கீழ் மண்மங்கலம் மற்றும் செல்லாண்டிபாளையம் பகுதிகளில் உள்ள பேக்கரி கடலைமிட்டாய் கம்பெனி தேங்காய் மட்டையில் குடோன் ஆகிய பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.


அப்பொழுது 14 வயது உட்பட்ட இரண்டு குழந்தைகள் நிற்கப்பட்டு கரூர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.  குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீது தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்துவதிலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிடம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் ஆறு மாதம் முதல் இரண்டும் ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது 20,000 வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என கரூர் தொழிலாளர் நல உதவியாளர் தெரிவித்துள்ளார்.