அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக நெமிலி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகையால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (23.11.2022) தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து இன்று காலை வலுவிழந்தது.
வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக
24.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.11.2022 முதல் 28.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தாமரைப்பக்கம் (திருவள்ளூர்) 10, திருத்தணி (திருவள்ளூர்), காஞ்சிபுரம் தலா 7, கரூர் (தர்மபுரி), வந்தவாசி (திருவண்ணாமலை) தலா 5, குடியாத்தம் (வேலூர்), கலவை PWD (ராணிப்பேட்டை), புதுச்சேரி, பூண்டி (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை) தலா 4, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), கலவை AWS (ராணிப்பேட்டை), திருத்தணி PTO (திருவள்ளூர்) தலா 3, சோழவரம் (திருவள்ளூர்), திருவள்ளூர், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), திருவாலங்காடு (திருவள்ளூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), கிருஷ்ணகிரி, பரூர் (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர், பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), எடப்பாடி (சேலம்), ஆற்காட் (ராணிப்பேட்டை), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), காட்பாடி (வேலூர்), தலா 2, பாலக்கோடு (தர்மபுரி), பொன்னேரி (திருவள்ளூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), தளி (கிருஷ்ணகிரி), தர்மபுரி PTO (தர்மபுரி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), அம்முண்டி (வேலூர்), வாலாஜஹ் (ராணிப்பேட்டை), செய்யார் (திருவண்ணாமலை), தேன்கனிகோட்டை (கிருஷ்ணகிரி), ஆம்பூர் (திருப்பத்தூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), போலூர் (திருவண்ணாமலை), வேலூர், ஆவடி (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பையூர் AWS (கிருஷ்ணகிரி), ஆலங்காயம் (திருப்பத்தூர் ) தலா 1 பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்:
தெற்கு ஆந்திர நிலப்பரப்பு பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. இது காற்றழுவு தாழ்வு பகுதியாக இருந்து மேலும் வலு குறைந்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது
இதன் காரணமாக தமிழகத்திற்கு அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் ஐந்து தினங்களில் ஓர் இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு மட்டும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.