கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றது:


 


 




 


கரூர் மாவட்டத்தில் கடந்த 26 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் மின்துறை அமைச்சர் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் ஆதரவாளர்கள் நண்பர்கள் என சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் எட்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை சென்றபோது வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியதால் ஐடி அதிகாரிகள் அளித்த புகாரின் படி திமுகவினர் உள்பட19 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை விரிவுபடுத்தி சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய பாதுகாப்பு படை உதவியுடன் நடத்தி வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொங்கு மெஸ் மணி சொந்தமான இரண்டு இடங்கள், எம்சி சங்கருக்கு சொந்தமான அலுவலகத்திற்கு சீல் வைத்து உள்ளனர். அதேபோல இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். இந்நிலையில் எட்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில் வழக்கறிஞர் அலுவலகம் பில்டர்ஸ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று அங்கிருந்து சில ஆவணங்கள் கையகபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


 


 




 


இந்நிலையில் இன்று நடைபெற்ற சோதனை நிறைவு செய்தனர். வருமானவரித்து அதிகாரிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் இருந்து  வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் இருந்து கிளம்பினர். விரைவில் சோதனை தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண