கிராம உதவியாளர் பணிக்கு டிசம்பர் 4ஆம் தேதி எழுத்து தேர்வு


ரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 4ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டு கடந்த 7ம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்போது பதவிக்கான எழுத்து திறன் தேர்வு வரும் 4ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது. 




கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, வெண்ணைமலை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புன்னம் சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, குழுத்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற உள்ளது. 




இத்தேர்வில் முதல் அரை மணி நேரம் தமிழ் மொழிக்கான எழுத்து திறனறித் தேர்வும் அடுத்த அரை மணி நேரம் ஆங்கில மொழிக்கான எழுத்து திறனறித் தேர்வு நடைபெறும் .இணையவலை மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தேர்விற்கான அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.


அதன்மூலம் அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இணையதள முகவரியில் விண்ணப்பதாரர் தனது பதிவு எண் மற்றும் அலைபேசி எண்ணை உள்ளிட்டு செய்தும் அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அவர்கள் அனைவரும் தேர்வு நாளன்று காலை 9 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் 9.50 மணிக்குபின் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 10.50 மணிக்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்படமாட்டார்கள். 


விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான அனுமதி சீட்டினை தேர்வு அறைக்கு தவறாமல் கொண்டு வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் இவற்றைத் தவிர அலைபேசி, புத்தகம், கைப்பை மற்றும் வேறு எந்த ஒரு மின்னணு சாதனங்களும் தேர்வு அறைக்கு கொண்டு வரக்கூடாது.





நேர்முகத் தேர்வுக்கு இணையதளத்தில் அனுமதிச் சீட்டு


கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு அனுமதிச்சீட்டு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற கரூர் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவரும் கரூர் கூட்டுறவு மண்டல இணை பதிவாளருமான கந்தராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.




கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களையும் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களில் 87 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் கட்டுணர் பணியிடங்களுக்கான நியமிக்க தேர்வு வரும் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தான்தோன்றி மலை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. எனவே நேர்முகத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டு இன்று டிசம்பர் 1ஆம் தேதி முதல் கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் இணையதளம் வழியாக பதிவிறக்க செய்து கொள்ளலாம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்