கரூரில், ரூ.8,62,235 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி

இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிக் கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 431 மனுக்கள் பெறப்பட்டது.

Continues below advertisement

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் 24 பயனாளிகளுக்கு. ரூ.8,62,235 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்டங்களை  வழங்கினார் .

Continues below advertisement

 


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 431 மனுக்கள் பெறப்பட்டது.   இதில் மாற்றுத்திறனாளிகளிடம்  55  மனுக்கள் பெறப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

 

 


அந்த வகையில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 5 நபருக்கு தலா ரூ.4999 மதிப்பில் ரூ24995 மதிப்பீட்டில் கதொலி கருவிகளையும், 2 நபர்க்கு தலா ரூ.7650 மதிப்பில்  ரூ.15300  மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டியும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா  ரூ6,840 மதிப்பீட்டில் ரூ.27360 மதிப்பிலான தையல் இயந்திரமும், 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.3500 மதிப்பிலான பார்வையற்றோர்கான ஊன்றுகோலும், 2 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு தலா  ழரூ.540 மதிப்பீட்டில் ரூ.1,080 மதிப்பிலான முழங்கை ஊன்றுகோலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 6  பயனாளிக்கு  இலவச வீட்டுமனை பட்டாவும்,  தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் குளித்தலை  சேர்ந்த மாற்றுத்திறனாளி வள்ளி என்பவருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணைகளையும்,  வாழந்து காட்டுவோம் சார்பில் இணை மானிய திட்டத்தில்  2 பயனாளிக்கு ரூ.7,90,000  ஆயத்த ஆடையகம், மளிகை கடைக்கு வைப்பதற்கான வங்கி  கடனுதவிக்கான ஆணைகளையும் , மகளிர் திட்டம் சார்பில் தேசிய  நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் சமுதாய அமைப்பாளருக்கான தற்காலிய பணி ஆணைகளையும் என மொத்தம் 24  பயனாளிகளுக்கு ரூ.8,62,235 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர்  வழங்கினார்கள்.

 


இந்நிகழ்வின்போது, திட்ட இயக்குநர்கள் திருமதி.வாணிஈஸ்வரி(ஊரக வளர்ச்சி முகமை),  திரு.சீனிவாசன்(மகளிர் திட்டம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.தண்டயுதாபாணி, தனித்துணை ஆட்சியர்(கலால்) திரு.பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola