கரூர் அருகே அரசு மணல் குவாரி மற்றும் சேமிப்பு கிடங்கில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


 




கரூர் மாவட்டம், நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. ஆரம்பித்த சில மாதங்களில் நன்னியூர் புதூர் கிராமம் அருகில் செயல்பட்ட மணல் குவாரி மூடப்பட்டது. ஆனால், வாங்கலை அடுத்த மல்லம்பாளையம் கிராமம் அருகில் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. கடந்த மாதம் மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் கரூரில் செயல்பட்ட மல்லம்பாளையம் மணல் குவாரியும் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான லாரிகள்  நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு காத்திருக்கின்றனர். 


 




 


இந்நிலையில் மீண்டும் மணல் குவாரி செயல்படுவதற்கான ஏற்பாடுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மல்லம்பாளையம் மற்றும் நன்னியூரில் மணல் குவாரிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  சோதனையானது 6 மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டுச் சென்றனர். 


 




இந்நிலையில்  மதியம் 12 மணியளவில் மீண்டும் நன்னியூர் காவிரி ஆற்றிற்கு 2 வாகனங்களில் வந்த 2 அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்களின் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டனர்.  அதனை தொடந்து வரப்பாளையத்தில் உள்ள நன்னியூர் புதூர் மணல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மாட்டு வண்டியில் தொழிலாளர்கள் மணல் அள்ளிச் சென்றதை பார்த்த அதிகாரி, இது தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தார். மேலும் நீர்வளத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு வருகிறார்.