கரூரில் முதல் முறையாக குளிரூட்டப்பட்ட நவீன காவல் உதவி மையத்தை எஸ் பி சுந்தரவதனன் துவக்கி வைத்தார்.
கரூர் பஸ் நிலையம் ரவுண்டான அருகே போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் வகையில், நகர காவல் உதவி மையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் துவக்கி வைத்தார். மேலும் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலை கட்டுப்படுத்தும் வகையில் சோலார் தொப்பியும், கைகளில் மட்டும் உறையும் கொடுக்கப்பட்டது.
மேலும் நேற்று தொடங்கியது முதல் கோடை காலம் முடியும் வரை போக்குவரத்து காவலர்களுக்கு நான்கு வேலைகளும் மோர் வழங்கப்படும், மேலும் சோலார் மூலம் இயங்கும் ஒளிரும் சாலை தடுப்பான்கள் கரூர் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்படும். சென்ற வருடத்தை விட இந்த வருடம் விபத்தினால் ஏற்படும் மரணங்கள் சற்று குறைந்துள்ளது. மேலும் விபத்து மரணங்களை குறைக்கும் வகையில் கரூர் மாவட்ட காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக எடுத்து வருகின்றனர் என எஸ்பி சுந்தரவதனம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், கரூர் நகர துணை கண்காணிப்பாளராக நேற்று முன் தினம் முதல் திருச்சி மாவட்டத்தில் பணியாற்றிய சரவணன் என்பவர் பதவி ஏற்று கொண்டு உள்ளார். சரவணன் அவருக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று திருக்குறள் புத்தகங்கள் வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த 21 மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பல்வேறு காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கரூர் நகர துணை கண்காணிப்பாளர் தேவராஜ் அவர்களுக்கு உடன் பணியாற்றிய காவலர்கள் பிரியாவிடை அளித்தனர்.
கரூரில் முதியவரின் இருசக்கர வாகனத்தில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு திடல் அருகில் நேற்று முன் தினம் இரவு நேரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடைவீதிக்கு வந்துள்ளார். தனது XL இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க உள்ளே சென்றுள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தில் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடி உள்ளது.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலற அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் எடுத்தனர். பின்பு இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுக்க, விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் இருசக்கர வாகனத்தின் உள்ளே புகுந்த பாம்பை மீட்கும் பணியில் இறங்கினர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்கள், காட்டுப்பகுதியில் விடுவதற்காக அதனை பத்திரமாக எடுத்துச் சென்றனர்.