கரூரில் பதவியேற்ற முதல் நாளே மக்களை சந்தித்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர், மனுநீதி நாள் முகாமில் 124 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சார்பாக ரூ.85.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் கோயம்பள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கரூர் மாவட்டத்தின் 19வது ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி முன்னிலையில் நடைபெற்ற இந்த மனுநீதி நாள் முகாமில் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 124 பயனாளிகளுக்கு ரூபாய் 85.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக மனுநீதி நாள் முகாமில் கலந்துகொண்ட ஆட்சியர் தங்கவேல் பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை அரசுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்