நியாய விலை கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபு சங்கர்  நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




கரூர் மாவட்டம், வாங்கல், குப்புச்சிபாளையம் மற்றும் தவிட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


நியாய விலை கடைகளில் நுகர்வோர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து நுகர்வோர்கள் பொருட்களை வாங்கி செல்கிறார்களா, பயோமெட்ரிக் இயந்திரத்தின் செயல்பாடு, எந்த மாதிரி உணவு பொருட்களை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள், அருகாமையில் உள்ள கடைக்காரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடையை தவிர்த்து பிற கடைகளில் எத்தனை நபர்கள் பொருட்கள் வாங்குகிறார்கள், வெளி மாநிலத்தவர்கள் ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு பொருட்களை வாங்குகிறார்கள், நியாய விலைக்கடைகளின் அடிப்படை வசதிகள்,  புழுங்கலரிசி, பச்சரிசி, சர்க்கரை, கோதுமை, சாம்பார் பருப்பு, உள்ளிட்ட முக்கிய பொருள்கள் தவிர்த்து கூட்டுறவு தயாரிப்புகளான டீ தூள், சாம்பார் தூள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்பும் மற்றும் விற்பனைகள் குறித்து, வாங்கல் மற்றும் குப்புச்சிபாளையம் கூட்டுறவு கடன் சங்ககளின் செயல்பாடுகள்  மற்றும்  உறுப்பினர்களின்  எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்கள். பொதுமக்கள் உணவுப் பொருள்களின் தரம் குறித்து எவ்வாறு கருத்து தெரிவிக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் ஒவ்வொரு உணவுப் பொருட்களின் இருப்புகள் பதிவேடுகளை என ஆய்வு செய்தார்.


 




மேலும், நியாய விலைக்கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் குடும்ப அட்டையில் உள்ள பெயர்களின் படி பள்ளிக்கு செல்லா குழந்தைகள் குறித்து படிவம் தயார் செய்து கணக்கீடு செய்ய வேண்டும் என அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார். முன்னதாக தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் மருத்துவமனைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, நாள்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்தும்,  எத்தனை வகை சிகிச்கைக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும், மருந்துகளின் இருப்பு குறித்தும்,  மேற்சிகிச்சைக்காக  எங்கு  பரிசீலினை    செய்யபடுகிறது குறித்தும், கண் சிகிச்சைக்காக எத்தனை தனியார் மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது குறித்து மருத்துவர்களின் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்கள்.





இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.தட்சிணாமூர்த்தி, இணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.சுதர்சனயேசுதாஸ், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் மருத்துவர் மரு.வசந்தி,  புலீயூர் செயல் அலுவலர் திரு.பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் திரு.ராஜசேகரன், வட்டாட்சியர்கள் திரு.சிவக்குமார்(கரூர்), திருமதி.ராதிகா(மண்மங்களம்), திரு.முருகன்(புகளூர்) மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


முதல்வரின் முகவரி துறை குறை தீர் சிறப்பு வாரம்.


திட்ட விவரங்கள் ஸ்டால் அமைப்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொதுமக்கள் தமிழக அரசு திட்டங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கரூர் மாவட்டத்தில் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முதல்வரின் முகவரி துறை குறைதீர் சிறப்பு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை குளித்தலை ஆர்டிஓ புஷ்பா தேவி தலைமையேற்று தொடங்கி வைத்து பல்வேறு துறைகளில் இருந்து வைக்கப்பட்ட அரங்கங்களை பார்வையிட்டார். இதில் தாசில்தார் கலியமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் வைரப் பெருமாள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


வேளாண் துறை, தோட்டக்கலை துறை, கல்வித்துறை மாவட்ட தொழில் மையம், சுகாதார துறை, வருவாய் துறை, ஆகிய துறைகளில் வைக்கப்பட்டிருக்கின்ற எந்தெந்த துறையில் என்ன அரசு திட்டங்கள் உள்ளது. என மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அரங்குகளில் விளக்க கையேடுகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டது. அதனால், பொதுமக்கள் தமிழக அரசின் திட்டங்களை எளிதாக தெரிந்து கொண்டு தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்கள் அளித்து பயன்படலாம். என தெரிவிக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து பார்வையிட்டு பயனடைந்தனர்.