விழுப்புரம்: இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழகத்திற்கு வந்து பணி செய்வதாகவும் இந்தி படிப்பதில்லை தவறில்லை அதை கட்டாயப்படுத்த கூடாது என்பதை தான் நாங்கள் கூறிவருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
 

மாநில சிறுபாண்மையினர் ஆணையம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டிகள் விக்கிரவாண்டியிலுள்ள சூர்யா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டியினை அமைச்சர்கள் பொன்முடி செஞ்சி மஸ்தான், மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் 70 கல்லூரிகளை சார்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே , பெரியாரும் அம்பேத்கர் கண்ட சமூக ஜனநாயகம், திராவிடம் சொல்லும் பண்பாட்டு நெறி ஆகிய தலைப்புகளில் பேச்சு போட்டி நடைபெற்றதில் மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

 

பேச்சு போட்டியை தொடங்கி வைத்த பின் மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, “படிக்கும் போதே மாணவர்கள் வரலாற்றை, மொழியை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும், புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவது மட்டும் கல்வியறிவு அல்ல மகளிர் படிக்கவே கூடாது என்ற காலம் இருந்த நிலையில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் 50 சதவிகிதம் உள்ளாட்சியில் இடஒதுக்கீடு வழங்கியவர் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார்.

 

17 வருடம் கல்லூரி ஆசிரியராக இருந்து அமைச்சர் பதவிக்கு வந்தவன் நான். மாணவர்களின் மனநிலை எனக்கு தெரியும். படிக்கும் போது மாணவர்கள் வரலாற்று தெரிந்து கொள்ள வேண்டும் என முதல்வர் வலியுறுத்தி வருகிறார். தமிழகம் தமிழ் வரலாறு போன்றவைகளை தெரிந்துகொள்ள வேண்டும். படிக்கும் போது ஜாதி மதம் தெரியாமல் வளர்ந்து வருகிறோம், இதற்கு காரணம் தந்தை பெரியார் தான். உயர்கல்வியை வித்திட்டவர் கலைஞர். அதேபோல் தொடக்க கல்வியை ஊக்குவித்தவர் காமராஜர். இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்குகிறது ன. மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் சிலர் கொண்டு வருகிறீர்கள்.

 

இங்கு மதவெறியை தூண்டி விட்டு ஆதாயம் தேடுகிறார்கள். அதனை மாணவர்கள் தூக்கி எறிய வேண்டும். கர்நாடகாவில் சமூக நீதிக்கு ஆபத்து. அண்ணா, கலைஞர் வந்த பின் தான் இரு மொழி கல்வி கொண்டுவரப்பட்டது. அதனால் தான் தற்போது கல்லூரிகளில் இரு மொழி கல்வி உள்ளது. தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழி படித்தால் போதும் மூன்றாவது மொழி தேவையில்லை. இரு மொழி கொள்கையை போதும்.... விருப்பமுடன் எந்த மொழியும் கற்கலாம். ஆனால் திணிக்க கூடாது” என்று கூறினார்.