மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 252 கனஅடியாக சரிவு.


 




காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 252 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையிலிருந்து, காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடியாக தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் மாயனூர் கதவணைக்கு வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. காலை வினாடிக்கு 598 கன அடி மட்டுமே தண்ணீர் வந்தது காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் சரிந்து, வினாடிக்கு 252 கனஅடியாக குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக, திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.


 


 




 


அமராவதி அணை


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில், வினாடிக்கு திறக்கப்பட்ட, 100 கன அடி தண்ணீர், 60 கனஅடியாக குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய் காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 53.32 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு, காலை வினாடிக்கு, 32 கன அடி தண்ணீர் வந்தது. 


கார்வழி ஆத்துப்பாளையம் அணை


 


 




 


கரூர் மாவட்டம், கா பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை, 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 14.53 அடியாக இருந்தது. நொய்யல் பாசனவாய்கலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நீர்வரத்து மிகவும் குறைந்ததால் அணைப்பகுதியில் வெளியே தெரியும் கற்குவியல்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண