Crime: திருமணமாகி 5 ஆண்டுகளே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருமணமாகி 5 ஆண்டுகளே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Continues below advertisement

குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

 

 


 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாளியாம்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் வடிவேல் மனைவி முத்துலட்சுமி (22). இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு நவீன் (4), புவின் (2) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். வடிவேல் கேரளாவில் சமையல் வேலை செய்து வருகின்றார்.

 

 


 

இந்த நிலையில், நேற்று மதியம் 2.30 மணி அளவில் வீட்டில் முத்துலட்சுமி தூக்கில்  சடலமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள்அவரது உடலை மீட்டு குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து தோகைமலையை சேர்ந்த முத்துலட்சுமி தாயார் ராஜாத்தி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி குளித்தலை காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

 

 


 

அதனையடுத்து வருவாய்த்துறையினர் யாரும் விசாரணை செய்ய மருத்துவமனைக்கு வரவில்லை எனவும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி குளித்தலை மாவட்டஅரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 


 

சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் வருவாய் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனையடுத்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அங்கு அமர்ந்திருந்த அனைவரையும் அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் குளித்தலை நெடுஞ்சாலையில்.போக்குவரத்து பாதிப்படைந்தது.

 

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola