கரூரில் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களை முதல் கட்ட பரிசோதனை செய்யும் பணியினை ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் கரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை பரிசோதனை இன்று துவக்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஆட்சியர் பிரபு சங்கர் முன்னிலையில் கிடங்கு திறக்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் உள்ள மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரபு சங்கர், “கடந்த வாரம் தேர்தல் தொடர்பான கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 2917 வாக்குப் பதிவு மின்னனு இயந்திரங்களும், 1499 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1611 ரசீது இயந்திரங்கள் என 8027 இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பெல் நிறுவன பொறியார்கள் 6 பேர் மேற்பார்வையில் 60 பேர் இந்த பரிசோதனையில் ஈடுபடுத்த உள்ளனர். நல்ல நிலையில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துக் கொண்டும், குறைபாடுகள் உள்ள இயந்திரங்களை தனியாக வைக்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார். மேலும், இந்த பணிகள் இன்று துவங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெறும் என்றார். திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும், தேசிய கட்சியான பாஜக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்