கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் 3 பயனாளிகளுக்கு ரூ.8340  மதிப்பீட்டில் காதொலிக்கருவிகளை வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிக்கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 443  மனுக்கள் பெறப்பட்டது.  இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 45  மனுக்கள் பெறப்பட்டது.


 


 




மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.


அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக, 3 நபருக்கு தலா 2,760 மதிப்பில் ரூ.8340 மதிப்பிலான காதொலிக்கருவிகளை ஆட்சியர் வழங்கினார்.


பின்னர் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்  பள்ளி மாணவர்களுக்கான  நடைபெற்ற  கவிதைப் போட்டிகளில்  முதல் பரிசு பெற்ற வெண்ணமலை பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி யு.பிரகதி ரூ.10,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், இரண்டாம் பரிசு பெற்ற பழையஜெயங்கொண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி க.சிவகீர்த்தனா ரூ.7,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும்,  மூன்றாம் பரிசு பெற்ற பசுபதிபாளையம் ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி ச.கோபிகா ரூ.5,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், கட்டுரைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற  வெண்ணமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி கா.பொ.ஸ்ரேயா ரூ.10,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், சின்னதாராபுரம் ஆர்.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி  க.சுபஶ்ரீக்கு ரூ.7,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், மூன்றாம் பரிசு பெற்ற சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி வே.சந்தியா ரூ.5,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும்,, பேச்சுப் போட்டிகளில் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற  கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவன் கசசிதரன் ரூ.10,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி  ஆ.பெரியக்காள் ரூ.7,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், 





 




 


மூன்றாம் பரிசு பெற்ற சின்னசேங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி ப. சந்தியா ரூ.5,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும் ஆட்சியர் வழங்கினார்.