கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டம் குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஆகஸ்ட் 1ம் தேதி (நேற்று) முதல் துவங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணியானது ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கி 2023ம் -ஆண்டு மார்ச் 31ம்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.




வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்குவதற்கும், ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விபரங்கள் இரண்டு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக ஆதார் இணைக்கும் பணியானது உறுதுணையாக அமைகிறது. வாக்காளரிடம் இருந்து ஆதார் எண்ணை பெறும் வழிமுறைகள் குறித்து தெரிவித்துள்ளதாவது, வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6(பி)பின் மூலமாக ஆதார் எண்களின் விபரங்களை தெரிவிக்கலாம்.





வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளர்களை சந்தித்து, தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் விபரங்களை சமர்ப்பிக்கலாம். 6 (பி) யின் மூலமாக பெற்று சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியை மேற்கொள்வார். வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் என்விஎஸ்பி போர்டல் மற்றும் வோட்டர் ஹெல்ப் லைன் ஆப் மூலமாக இணைக்கலாம். வாக்காளர்கள் இ-சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவை மூலமாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் முதன்மை அரசு செயலாளர் ஆகியோர்களின் அறிவுறுத்தவின்படி சிறப்பு முகாம் வரும் செப்டம்பர் 4ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. வாக்காளரிடம் ஆதார் அட்டை இல்லை என்ற நேர்வில், இந்திய தேரதல் ஆணையம் அங்கீகரித்துள்ள 11 வகை சான்றில் ஏதாவது ஒரு சான்றின் நகலை வாக்காளர்கள் சமர்ப்பிக்கலாம்.





மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு அடையாள அட்டை, வங்கி, அஞ்சலகம் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், தொழிலாளர் நலத்துறையின் மூலம் காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி இந்திய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட அட்டை, இந்திய கடவூச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள். மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ அடையான அட்டை, இந்திய அரசின் மூலம் சமுக நலம் மற்றும் திறன் மேம்பாடு துறையால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை, வாக்காளர்களின் ஆதார் விபரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட வாக்காளார் பதிவு அலுவலர்களால் பாதுகாக்கப்படும்.




எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளார்களும் தானாக முன்வந்து ஆதார் எண்ணை அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து கரூர் மாவட்டத்தின் நான்கு சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலின் 100 சதவீதம் தூய்மையாக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அன்று அனைத்து வாக்க ளர்களும் ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து முன்னோடி மாவட்டமாக கரூர் மாவட்டம் நிகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண