கரூர் புத்தகத் திருவிழா 10ம் நாளில் நடந்த நர்த்தகி நடராஜன் கலை நிகழ்ச்சி

மாபெரும் புத்தக திருவிழாவின் 10 ஆம் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் வி.ஏ.சரவணன்  தலைமை வகித்தார்கள்.

Continues below advertisement

கரூர்  புத்தக  திருவிழா - 2022 -  10ஆம்  நாள் நிகழ்ச்சியில் சிந்தனை  அரங்கத்தில்  “சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்” என்ற இலக்கிய நாட்டியம் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள பத்மஶ்ரீ. கலைமாமணி. நர்த்தகி நடராஜ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Continues below advertisement


கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைவிடத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் புத்தக திருவிழாவின் 10 ஆம் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் வி.ஏ.சரவணன்  தலைமை வகித்தார்கள். துணைத்தலைவர் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் பெ.மைலவேலன் மற்றும் பொருளாளர் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம் ஏ.குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாபெரும் புத்தக திருவிழா - 2022  (19.08.2022  முதல்  29.08..2022  வரை )  நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V.செந்தில்பாலாஜி (19.08.2022) அன்று  திறந்து வைத்து பார்வையிட்டார்கள். கரூர் புத்தக திருவிழா  –  2022 -  10ஆம்  நாள் நிகழ்ச்சியில் சிந்தனை அரங்கத்தில் “சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்” என்ற பத்மஶ்ரீ.கலைமாமணி. நர்த்தகி நடராஜ் இலக்கிய நாட்டியம் நடைபெற்றது.


கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களில் சிறப்பான சாதனைகளை படைத்த மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்த ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் இன்றைய நம்முடைய சிறப்பு விருந்தினர்கள் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். தொடர்ந்து இந்த புத்தக திருவிழாவின் நிறைவு நாள் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் புத்தக திருவிழாவிற்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார். முன்னதாக கரூர் உதவி ஆணையர் (கலால்) என்.எஸ்.பாலசுப்பிரமணியம் வரவேற்றும், நிறைவாக கரூர் வாசகர் வட்ட நெறியாளர் மாவட்ட மைய நூலகம் பொறி.பி. சிவக்குமார் நன்றி தெரிவித்து பேசினார்கள். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.லியாகத், கவிதா(நிலமெடுப்பு), மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம்,  சமுக பாதுகாப்புத்திட்ட  தனித்துணை  ஆட்சியர்  சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்), புஷ்பாதேவி (குளித்தலை) மாவட்ட வழங்கல் வலுவலர் தட்சிணாமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் வசுமதி,  மாவட்ட புத்தகக் கண்காட்சி குழுவினர்,சரவணகுமார், சிவக்குமார், தங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement