மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, 1.34 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. மாயனூரில் 50 மில்லி மீட்டர் மழை கொட்டியது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து 2,173 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப் படி வினாடிக்கு ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 406 கனடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறுவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து, 33 ஆயிரத்து, 186 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.




திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,572 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1,933 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 959 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம் 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 87.93 அடியாக இருந்தது.  




திண்டுக்கல் மாவட்டம்  நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 33.63  கன அடி ஆக இருந்தது.


கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே, கார்வாலி ஆத்துப்பாளையம் அணைக்கு  காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.9 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26.17 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில்  தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.




மாயனூரில் 50 மில்லி மீட்டர் மழை. கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் , பெய்த மழை அளவு கரூர் 11.2 மில்லி மீட்டர். அரவாக்குறிச்சி 2 அணைபாளையம் 26.4, குளித்தலை 16 தோகமலை 2.3,  கிருஷ்ணராயபுரம் 45, மாயனூர் 50, பஞ்சபட்டி 47.4, கடவூர் 12.6, மைலம்பட்டி 23 ஆகிய அளவுகளில் மழை பெய்தது, மாவட்டம் முழுவதும் சராசரியாக, 18.84  மில்லிமீட்டர் மழை பெய்தது.