அரவக்குறிச்சி அருகே திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வீடு திரும்பியபோது மரத்தின் மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 

Continues below advertisement

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மதுரை டு  கரூர் தேசிய நெடுஞ்சாலை ஈரோடு மாவட்டம் சூளை என்ற பகுதியை சார்ந்த கிருஷ்ணகுமார் (40) குடும்பத்தினர் ஐந்து நபர்கள் சனிக்கிழமை மாலை ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஈரோடு செல்வதற்காக மதுரை டு கரூர் தேசிய நெடுஞ்சாலை ஆண்டிப்பட்டி கோட்டை அருகே சென்று கொண்டிருந்தனர்.

இன்று காலை 3.30 மணியளவில் எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை  இழந்து அருகில் இருந்த மரத்தின் மீது மோதியதில் காரை ஓட்டிய கிருஷ்ணகுமார் (40) அவரது மகள் வருணா (10), மாமியார் இந்திராணி (67) ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் ஏற்பட்டு சுதர்சன் (15) மற்றும் அவரது மனைவி மோகனா (40) இருவரும்  கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

மேலும் விபத்துக்கு உண்டான காரிலிருந்து கிருஷ்ணகுமார் இறந்த நிலையில் சிக்கிக் கொண்டதால் அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை கிரேன் உதவியுடன்  மீட்டனர். திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு வருகிறது.