கரூர் பழைய அரசு மருத்துவமனை அருகே சாக்கடை பள்ளத்தால் அதிகரிக்கும் விபத்து.


 


 




 


கரூர் பழைய அரசு மருத்துவமனை வளைவில், சில பாதத்தில், சிமென்ட் மூடி அமைக்காமல் திறந்த நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரூர் பழைய அரசு மருத்துவமனை அருகில், ஆர்டிஓ அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு  வணிக  நிறுவனங்கள் உள்ளன.


 


 




கடந்த சில மாதங்களுக்கு முன், பழைய அரசு மருத்துவமனை நுழைவுவாயில் அருகே, சாலையின் குறுக்கே, சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில், சிறு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மேல் பகுதியில், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் வகையில், துளை  போடப்பட்டுள்ளது. ஆனால் , துளை மீது சிமெண்ட் மூடி போடப் படாததால் திறந்த நிலையில் பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். டூ வீலர்களில் சென்ற சிலர் தடுமாறி விழுந்து  காயமடைந்துள்ளனர் .


 


 




 


இந்நிலையில், அந்த இடத்தில் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், போலீசார் உதவியுடன் இரும்பு தடுப்புகள் வைத்துள்ளனர், இருப்பினும் போக்குவரத்துக்கு இடையூறாக இந்த தடுப்புகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  எனவே ,கரூர் பழைய அரசு மருத்துவமனை அருகே திறந்த நிலையில் உள்ள, சாக்கடை பள்ளத்தை ,சிமெண்ட் மூடி கொண்டு பாதுகாப்பாக மூடுவதற்கு ,மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.