Crime: நடுரோட்டில் பெண்கள்! கார் நின்றால் வழிப்பறி! அச்சமூட்டும் மதுரவாயல்!கைதானவர்கள் பரபர வாக்குமூலம்!

கஞ்சா போதையில் காருடன் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Continues below advertisement

சென்னை மதுவரவாயல் பகுதியில் காருடன் பெண் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Continues below advertisement

சென்னையின் மதுரவாயல் புறவழிச்சாலை சுங்கச்சாவடி அருகே கடந்த 6ம்தேதி பெண் ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து 6 பேரையும் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


வன்கொடுமை, நகை,  பணம் பறிப்பு என குற்றவாளிகளின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் வாக்குமூலம் குறித்து தெரிவித்த போலீசார், நாங்கள் வழக்கமாக இரவு நேரம் சாலையோரம் உள்ள நியாயவிலைக்கடைக்கு பின்புறம் மதுகுடித்தபடி கஞ்சா அடிப்பது வழக்கம்.அப்படி கடந்த சனிக்கிழமை இரவும் கஞ்சா அடித்தோம். அப்போது கால்டாக்சி ஒன்று நீண்ட நேரமாக சாலையோரம் நின்றது. இதைப்பார்த்த நாங்கள் கார் அருகே சென்று ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தோம்.அந்த ட்ரைவர் ஒரு பெண்ணுடன் பாலுறவில் ஈடுபட்டிக்கொண்டிருந்தார். உடனடியாக கதவைத்தட்டி அவர்களை வெளியே அழைத்தோம். அப்போது அந்த பெண் எந்த பதட்டுமும் இன்றி கார் கதவைத்தட்டிய எங்களுடைய நண்பனை அடித்தார். இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

அவர்கள் காரில் ஏறி தப்பிச்செல்ல முயன்றனர். நாங்கள் ட்ரைவரை அடித்து கீழேதள்ளிவிட்டு  காருடன் அந்த பெண்ணைக் கடத்தினோம். நாங்கள் கஞ்சா போதையில் இருந்ததால் என்ன செய்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை. அந்த பெண்ணை மறைவான இடத்துக்கு இழுத்துச்சென்று அவரை தாக்கினோம். நிர்வாணப்படுத்தி சித்திரவை செய்தோம். அவரை விலைமாது என்று நினைத்தோம். ஆனால் அவர் கள்ளக்காதலில்  இருந்தது பின்னர் தெரியவந்தது. ஆனாலும் எங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமென அப்பெண்ணை வற்புறுத்தினோம். அவர் மறுத்துவிட்டார். பின்னர் கட்டாயப்படுத்தி அவரை மாறி மாறி வன்கொடுமை செய்தோம். அவர் கழுத்தில் இருந்த தாலி மற்றும் செயினை பறித்துக்கொண்டோம். அப்போது போலீசார் ஒருவர் அங்கு வருவதை பார்த்து தப்பித்துச் சென்றுவிட்டோம் என்றனர்.

குற்றவாளிகளின் இந்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதைவஸ்துகள் அதிகரிப்பதும் அதனால் குற்றச்செயல்கள் நடப்பதும் அதிகரித்துள்ளது. இதனை உடனடியாக கட்டுப்படுத்த போலீசாரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மதுவராயல் பகுதியில் நடு இரவில் பெண்களை சாலையில் நிற்க வைத்து கார் டாக்ஸியை மறைப்பதும், கார் நின்றதும் திடீரென ஒரு கும்பல் வந்து வழிப்பறியில் ஈடுபடுவதும் வாடிக்கையாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் உதவிக்காக கால் டாக்ஸியை மறைப்பது போல மறைத்துள்ளார். உதவிக்காகத்தான் காரை மறைக்கிறார் என டாக்ஸி ட்ரைவரும் காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல் ட்ரைவரிடம் வழிப்பறி செய்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement