வெள்ளியணை ஏரி திறப்பு.
கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி உட்பட்ட மேட்டுப்பட்டி ஏரியில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வி .கணேசன் ஆகியோர்கள் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். த.பிரபுசங்கர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம், (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி) க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, துணை மேயர் திரு ப. சரவணன் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது:
400 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளியணை ஏரியானது சுமார் 17மி.கன அடி கொண்டது. இந்த ஏரியில் இரண்டு மதகுகள் மற்றும் இரண்டு கழுங்குகள் உள்ள இந்த ஏரிக்கு குடகனாரில் இருந்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியணை ஏரியிலிருந்து முதல்முறையாக தண்ணீர் கொண்டு வரப்பட்டது. வெள்ளியணை குளத்திலிருந்து நீர் விவசாயிகளின் நலன் கருதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வெள்ளியணை உப்பிடமங்கலம், குமாரபாளையம், வீரராக்கியம் ஆகிய விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறுவார்கள். இந்த ஏரியானது 23 ஆண்டுகளுக்கு முன்னர் மழை நீரால் நிரம்பியது. ஆனால் இப்போது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கனவு திட்டமான குடகனாறு இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வெள்ளியணை ஏரி நிரம்பி இருக்கிறது. என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் நான் மாண்புமிகு முதலமைச்சருக்கு அவர்களுக்கு விவசாய பெருமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கரூர் மாவட்டத்தில் மிக முக்கிய ஏரிகளாக இருக்கக்கூடிய வெள்ளியணை, பஞ்சப்பட்டி, தாதம்பாளையம் இந்த மூன்று ஏரிகள் மிகப் பிரதான பெரிய ஏரிகள் இதனை தொடர்ந்து அடுத்து இருக்க கூடிய பல்வேறு ஏரிகள் இருக்கின்றன இந்த மூன்று ஏரிகளோடு சேர்த்து மிக முக்கியமான ஏரிகளுக்கு காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் இருந்து வெளியேறப்படும் உபரி நீர் கொண்டு ஏரிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தாதம்பாளையம் ஏரிக்கு ரூ.15 கோடி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தாதம்பாளையம் ஏரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மாவட்ட ஆட்சியரின் கருத்துரையின் பேரில் வனத்துறைக்கு வேறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த இடத்தில் பொதுத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது. வெள்ளியணை மற்றும் பஞ்சபட்டி ஏரிகளுக்கு கூடுதலாக நீதிகளை பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து கொண்டு வருகிறோம். வெள்ளியணை பொருத்தவரை 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியினை நான்கு பக்கமும் கரைகள் அமைத்து முழுவதுமாக தூர்வாருவதற்கான பணிகள் மேற்கொள்வதற்கான முயற்சி எடுத்து வருகிறோம் விரைவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நிதியினை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என
தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்திரு .எம். லியாகத், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் திருமதி. தேன்மொழி, வருவாய் கோட்டாட்சியர் (கரூர்) செல்வி. ரூபினா, கரூர் வட்டாட்சியர் திரு. சிவக்குமார், வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் திரு சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்