காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ரெட்டி பேட்டை தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர், காஞ்சிபுரம் மாநகர பாஜகவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் பாஜக பிரமுகரான ஜெகதீசன் யூட்யூபில் தமிழ்நாடு முதலமைச்சரையும், அவரின் குடும்பத்தினரையும் தரக்குறைவாக சித்தரித்து பேசி உள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீசார் பாஜக பிரமுகரான முன்னாள் நகர தலைவர் ஜெகதீசனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு கைது செய்து உள்ளனர்.பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாஜக கட்சியினர் இடையேயும், காஞ்சிபுரம் பொதுமக்கள் இடையேயும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

முன்னதாக, இதுகுறித்து காஞ்சிபுரம் தி.மு.க. வழக்கறிஞர் அணி பிரிவு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீசார் பா.ஜ.க. பிரமுகரான முன்னாள் நகர தலைவர் ஜெகதீசனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு கைது செய்து உள்ளனர். பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பா.ஜ.க. கட்சியினர் இடையேயும், காஞ்சிபுரம் பொதுமக்கள் இடையேயும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சமீப காலங்களாகவே யூடியூப் சேனல்களில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும் பல்வேறு அவதூறு வார்த்தைகளால் வீடியோ பதிவு செய்து வெளியிடுவதும் அதனை வைரலாகும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பொது சமூகவலைதளத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை பயன்படுத்துவதும், ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியிரை குறை சொல்வதும் அதற்கு அவர்கள் பதில் சொல்வதும் வரம்பு மீறி செல்வதால் இதனை சைபர் காவல்துறை கண்காணித்து முடக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


 




 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண