மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றின் கரையோரத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் பயன் படாத வலைகள் அருகே கிடந்துள்ளது. நீரில் அடித்து வரப்பட்டதாக கூறப்படும் 10 அடி அரிய வகை நாகப்பாம்பு அந்த வலையில் மாட்டிக் கொண்டு சிக்கி உள்ளது. இன்று காலை மீனவர்கள் மீன் வலைகள், ரம்பர் படகுகளை ஆற்றிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பாக வைக்க செல்லும் போது பாம்பை பார்த்து அச்சமடைந்துள்ளனர்.
இதை அறிந்த பொதுமக்கள், மீனவர்கள் அப்பகுதியில் குவிந்தனர். புதுவகை நல்ல பாம்பு என்பதால் பொதுமக்கள் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தகவல் கொடுத்ததன் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
கரூர் காவேரி ஆற்றில் 2,03,759 கன அடி தண்ணீர்- தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு.
கர்நாடகா மாநிலத்தில் பெய்யும் கனமழை மற்றும் காவிரி ஆறு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. விநாடிக்கு 2,03,759 கன அடி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டது.
அந்த தண்ணீரானது தற்போது கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. தவிட்டுப்பாளையம் கரையோர பகுதிகளில் 105 வீடுகள் உள்ளன. தற்போது இப்பகுதிகளில் 42 வீடுகளில் வெள்ள நீர் சூழ்துள்ளது. காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் அப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நபர்களை மாவட்ட நிர்வாகம் சார்பாக மீட்டு இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு உணவுகள், மருத்துவ வசதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒலிபெருக்கி மூலம் காவிரி கரையோர பகுதிகளில் ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ, ஆடு மாடுகளை மேய்க்கவோ கூடாது என புகளூர் வட்டாட்சியர் முருகன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.