குற்றங்கள் குறைய வேண்டி முருகனுக்கு காவடி எடுத்த காவல் துறையினர்

இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதீமன்ற நீதிபதி தீனதயாளம் தக்கலை டிஎஸ்பி கணேசன் உட்பட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்

Continues below advertisement

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் குற்றங்கள் குறைந்து, மக்கள் அமைதியாக வாழவும், நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்க வேண்டியும் காவல்துறை மற்றும் பொதுப்பணி துறையினர் விரதமிருந்து வேளிமலை முருகனுக்கு பால் காவடி ஏந்தி சென்று நேர்த்தி கடன் செய்யும் பாரம்பரிய நிகழ்வு இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திக் கீழ் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளி கிழமையன்று குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும் நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்கவும் பாரம்பரியமாக வருடா வருடம் தக்கலை காவல் துறை மற்றும் பொது பணித்துறை சார்பில் வேளிமலை முருகனுக்கு பால் காவடி ஏந்தி சென்று நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.

Continues below advertisement


இந்த வருடம் கார்த்திகை கடைசி வெள்ளியான இன்று தக்கலை காவல் நிலையத்தில் இருந்து போலீசாரும் காவல் துறை அதிகாரிகளும் காவடிகட்டி வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு காவடி பவனியாக சென்றனர். மழை பொழிய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தக்கலை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் இருந்தும் 41ஆம் நாள் விரதமிருந்து வேளிமலை முருகனுக்கு நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க பால் காவடி ஏந்தி சென்று வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.



நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதீமன்ற நீதிபதி தீனதயாளம் தக்கலை டிஎஸ்பி கணேசன் உட்பட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலம் முதல் தற்போது வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படாத பாரம்பரிய நிகழ்வு ஆகும்.

Continues below advertisement