காஞ்சிபுரத்தில் கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி நடவடிக்கையாக, தேவையில்லாமல் வெளியே சுற்றி தெரியும் பொதுமக்களுக்கு, சுகாதார பணியாளர்களால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் வீடு வீடாக சென்று  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

 

 

 



 



 

காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் 106 பணியாளர்களை கொண்டு நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள சுமார் பதினைந்தாயிரம் வீடுகளுக்கும் பணியாளர்கள் சென்று வீடுகளில் உள்ள அனைவருக்கும் வெப்ப மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை காஞ்சிபுரம் பெருநகராட்சி சுமார் 17.48 லட்சம் வசூலிக்கப்பட்டதாக நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து காய்ச்சல் கண்டறிதல் முகாம் , வீடு வீடாக சென்று உடல் வெப்ப நிலையை கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் .

 

 



 


 



அவ்வகையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் அமைந்துள்ள ஐம்பத்தொரு வார்டுகளில் சுழற்சி முறையில் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.  இன்று  சின்ன காஞ்சிபுரம் திருப்புகூடல் தெருவில் நடைபெற்ற கொரோனா சிறப்பு பரிசோதனை முகாம் மற்றும் அன்னை சத்யா நகரில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் கண்டறியும் முகாம் ஆகியவற்றை பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.

 



.

 


 



அதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் , காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் நாள்தோறும் தூய்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாகவும் இன்று முதல் 106 பணியாளர்களைக் கொண்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டு 15 ஆயிரம் வீடுகளில் உள்ளோருக்கு வெப்பநிலை கண்டறியப்பட்டு அறிகுறி உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .இதேபோல் நாளொன்றுக்கு மொபைல் வாகனம் மற்றும் வார்டு பகுதியில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தினசரி 2000 பரிசோதனை மாதிரிகள் வீதம் இதுவரை 2,57,487 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெருநகராட்சி எல்லைக்குள் கொரோனா விதிகளை மீறி பொதுமக்களிடம் இருந்து இதுவரை 17 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பணியாளர்கள் சுழற்சி முறையில் நகரில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தனர்.

 






 

அதேபோல் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு அனைவருக்கும் கட்டாயம் கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கட்டாயம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்படுவதால், பரிசோதனைக்கு  பயந்து பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.