நடிகர் விவேக்கிற்கு இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில், இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர், தி.மு.க. தலைவர் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இவர்கள் தவிர, பல்வேறு திரைப்பிரபலங்களும் விவேக் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்.</p>— Kamal Haasan (@ikamalhaasan) <a >April 16, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
“கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.”
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.</p>— Kamal Haasan (@ikamalhaasan) <a >April 16, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
“அவரது உடல் நலக்குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள விவேக் , கமல்ஹாசனுடன் மட்டும் இதுவரை இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.