கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் மாற்றப்பட்டு, ஷர்வண்குமார் ஜடாவத் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராகவும், பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நேற்றுமுன்தினம்  பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த நிலையில் போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது. காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர். 


இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று மாலை வன்முறை நடைபெற்ற இடங்களை உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது காவல்துறையைச் சேர்ந்த டிஐஜி, எஸ்.பி. மற்றும் 52 காவலர்களுக்கு வன்முறை சம்பவத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.


மேலும் வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியின் வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். அதேசமயம் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். ஷர்வண்குமார் ஜடாவத் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராகவும், பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Kallakurichi | கலவரத்துக்கு ஸ்ரீமதி அம்மாதான் பொறுப்பு..சக்தி பள்ளி செயலாளர் சாந்தி பரபரப்பு பேட்டி


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண