கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி செல்வகுமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்:


கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின்  மரணத்தில், நீதி கேட்டு பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் சில நேரத்தில் கலவரமாக மாறியது. கலவரத்தில் பள்ளியின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. பேருந்துகள், நாற்காலிகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. கலவரத்தால் காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. அதையடுத்து அப்புதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


பணியிட மாற்றம்: 


இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி செல்வகுமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.




படம்: ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி செல்வகுமார்


அதை தொடர்ந்து கள்ளக்குறிச்சியின் புதிய ஆட்சியராக ஸ்ரவன் குமாரும் , புதிய எஸ்.பியாக பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார்.




Also read: கள்ளக்குறிச்சி கலவரம் : ட்விட்டர், வாட்ஸ் அப்பில் வெளியான பதிவுகள் மூலம் சைபர்கிரைம் போலீசார் விசாரணை தொடங்கினர்