தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் தளவாபாளையம் பகுதியில் மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி அழைப்பிதழில் சிறப்பு விருந்தினராக செந்தில் பாலாஜி கலந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 



 


தளவாபாளையம் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் எம்எல்ஏ மற்றும் மாநகராட்சி மேயர் ஈட்டி எறிந்து போட்டியை தொடங்கி வைத்தனர். கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பாக இந்தியாவின் தங்கமன் நீரஜ்சோப்ரா 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் தங்கப்பதக்கம் வென்றதை கொண்டாடும் வகையில் இரண்டாவது மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 16,18,20 வயதுடைய ஆண்கள்,பெண்கள் என தனித்தனி பிரிவாக நடைபெற்ற இப்போட்டியில்  தமிழ்நாடு முழுவதும் உள்ள 120-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


 




 


நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் மாநகராட்சி மேயர் கவித்த கணேசன், புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஈட்டி எறிந்து போட்டியினை தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. குறிப்பாக நடைபெறும் நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் விளையாட்டு அழைப்பிதழில் வெளியிட்டிருந்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி  வருகை தருவதாக குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.