இன்னும் சில நாட்களில் , பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என பார்ப்போம். 


பொங்கல் பண்டிகை: 


தமிழர் பண்டிகையான பொங்கலானது, தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக பார்க்கப்படுகிறது. மாட்டுப் பொங்கல், போகி பண்டிகை, திருவள்ளுவர் திருநாள் என பல திருநாளும்  தொடர்ந்து வருவதால் கூடுதல் கொண்டாட்டமாக இருக்கிறது. இந்த பண்டிகையை கொண்டாட, பலரும் சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்துவிடுவர் . இந்நிலையில், பொங்கல் விடுமுறை எத்தனை நாள் இருக்கும் என்பது குறித்து பார்ப்போம். 


விடுமுறை:


தமிழ்நாட்டில், ஜனவரி 14 ஆம் தேதியான செவ்வாய்க் கிழமை பொங்கல், ஜனவரி 15- புதன் கிழமையான திருவள்ளுவர் தினம், ஜனவரி 16- வியாழக் கிழமையான உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.  ஆகையால் 3 நாட்கள் அதிகாரப்பூர்வமாக கிடைத்துவிடும்.




4 நாட்கள்


ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை விழா கொண்டாடப்பட உள்ளது. போகி பண்டிகைக்கு தமிழக அரசு ஆண்டு விடுமுறை அறிவிக்காவிட்டாலும், தனிப்பட்ட வகையில் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த ஆண்டும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போகியுடன் 4 நாட்கள் விடுமுறை .


6 நாட்கள்:


ஜனவரி 11, ஜனவரி 12 ஆகிய தேதிகள் சனி ஞாயிறு என்பதால், விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் , இந்த 2 நாட்களையும் சேர்த்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 


ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை விழா கொண்டாடப்பட உள்ளது. போகி பண்டிகைக்கு தமிழக அரசு ஆண்டு விடுமுறை அறிவிக்காவிட்டாலும், தனிப்பட்ட வகையில் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த ஆண்டும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


9 நாட்கள்:


ஒருவேளை ஜனவரி 17 வெள்ளிக்கிழமை அன்றும் அரசு விடுமுறை அளிக்கும்பட்சத்தில் அடுத்து, ஜனவரி 18 சனிக்கிழமை, ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை என 9 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும்.


ஜனவரி 17ஆம் தேதி அரசு அளித்த விடுமுறையை ஈடுகட்ட, அடுத்து வரும் ஒரு சனிக்கிழமையை வேலையை அறிக்கலாம் என அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்,


திருச்சிக்கு 10 நாட்கள் விடுமுறை:


இதில் திருச்சிக்கு மக்களுக்கு கூடுதல் சிறப்பு என்னவென்றால், ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக் கிழமை வைகுண்ட ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கும் என்று திருச்சி மாவட்ட அரசு ஊழியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 


மேற்குறிப்பிட்டவை எல்லாம் அனுமானத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டவையாகும். அதிகாரப்பூர்வ விடுமுறையானது , அரசு அறிவித்த பின்பே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. 



Also Read: Velunachiyaar: அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை: ஒரே லைனில் நிக்கும் பிரதமர் மோடி, விஜய்