2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.



  • ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு முன், மாவட்ட ஆட்சியர் முன்பு அனுமதி பெற வேண்டும்.

  • அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் போட்டிகளை நடத்த கூடாது.

  • காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நேரத்தில் இருந்து, அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

  • காளைகளுடன் உரிமையாளர் மற்றும் உதவியாளர் என இருவர் மட்டுமே இருக்க வேண்டும்

  • கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருக்க வேண்டும்

  • மாடுபிடி வீரர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். மேலும், 2 நாட்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருக்க வேண்டும்.

  • போட்டியில் அதிகபட்சமாக 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

  • பார்வையாளர்கள், மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே இருக்க வேண்டும்.

  • காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதியில்லை

  • கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள், அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவர்