பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை  சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், கொண்டாட வழி வகை செய்யும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின்  கீழ்   அனைத்து  அரிசி    குடும்ப  அட்டைத்தாரர்களுக்கும்  மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு  முகாம்களில் வசிக்கும் கும்பத்தினருக்கும்,  தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும்  முழு கரும்பு  ஆகியவற்றுடன் ரூ-1000/. ரொக்கப்பணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2023 பொங்கல் பரிசி திட்டத்தினை 2023  ஜனவரி 9-ம் தேதி  தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைக்கப்பட உள்ளது. அதற்கு பின்பு அனைத்து நியாய விலைக்கடைகளிலும்  இப்பணி தொடங்கப்படும்.


இச்சிறப்பு பணிகளுக்கு முன்னேற்பாடுகள் செய்வதற்கும் இப்பணிகளை கண்காணித்திடவும், மேற்பார்வை செய்திடவும், தகுதியான நபர்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திடவும், இப்பணி நல்லமுறையில் நடந்திடவும் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள்  கீழ்கண்டவாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

வ.எண்

வட்டம்

கண்காணிப்பு அலுவலர்கள்

கைப்பேசி எண்.

1

செங்கல்பட்டு வட்டம் (ம)

வண்டலுர் வட்டம்.

(காட்டாங்கொளத்தூர்  வட்டாரம்)

சார் ஆட்சியர், செங்கல்பட்டு,

9445000414

2

மதுராந்தம் வட்டம்,  (அச்சிறுப்பாக்கம் வட்டாரம்)

வருவாய் கோட்டாட்சியர், மதுராந்தகம்.

9445000415

3

செய்யூர் வட்டம்

(சித்தாமூர் வட்டாரம்)

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், செங்கல்பட்டு.

9944725575

4

செய்யூர் வட்டம்

(இலத்தூர் வட்டாரம்)

 

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், செங்கல்பட்டு-

9725307555

5

திருக்கழுக்குன்றம்வட்டம்

(திருக்கழுக்குன்றம் வட்டாரம்)

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர், செங்கல்பட்டு.

9500959938

6

திருப்போருர் வட்டம்

(திருப்போருர் வட்டாரம்)

உதவி ஆணையர், (கலால்),

செங்கல்பட்டு-

9444939212

ஆகியோர்கள் சிறப்பு மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு வட்டத்திற்கும் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய   நடமாடும் கண்காணிப்புக்  குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு 09.01.2023  முதல் பொங்கல் திருநாளுக்கு  முன்னர் வரை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நியாயவிலைக்கடைகளுக்கும் 13.01.2023 (வெள்ளிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


200  முதல் 250 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு

பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருப்பதால், அதனை பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைத்தாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலை கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க, விநியோக்கத்தை முறைப்படுத்தும் வகையில், தெரு வாரியாக உள்ள  குடும்ப அட்டைகளின்  எண்ணிக்கை அடிப்படையில்,  நாள் ஒன்றுக்கு 200  முதல் 250 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு  பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நியாவிலை கடை

பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தினை விற்பனை முனைய இயத்திரத்தின் மூலம்  (POS) கைரேகை சரிப்பார்க்கும் முறைப்படி நியாவிலை கடைகளில் வழங்கப்பட உள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படாமல் திரும்ப அனுப்பப்படமாட்டாது. தகுதியான அனைவருக்கும் பொங்கல் பரிசு பொருட்களும் ரொக்கப்பணமும் ஒருசேர வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் யார் வேண்டுமானாலும், பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தை நியாய விலை கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

கட்டுப்பாட்டு அறைகள்

பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கும் பணியை கண்காணித்திட மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும், கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு வட்டத்தின் புகார் எண். 8637616667

    மதுரராந்தகம்  வட்டத்தின் புகார் எண் .8248212994

    செய்யூர் வட்டத்தின் புகார் எண். 9597373617

    திருக்கழுக்குன்றம்  வட்டத்தின் புகார் எண். 9940624877

    திருப்போரூர் வட்டத்தின் புகார் எண். 9944336339

   வண்டலுர் வட்டத்தின் புகார் எண். 7708931572

மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1967 மற்றும் 1800-425-5901 என்ற எண்களுக்கு புகார்களை தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.