சென்னை நகைக்கடையில் ரூ.1.50 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 1.50 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement

சென்னை, சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் ஸ்ரீ.கே.ஜே. என்ற தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கடையில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்று வந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது. மேலும், கணக்கில் காட்டப்படாமல் இருந்த ரூபாய் 1.50 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணத்தின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

Continues below advertisement
Sponsored Links by Taboola